எமது நோக்கு
"ஆரோக்கியமிகு சமூகமொன்றைக் கட்டியெழுப்புகையில் ஆயுர்வேத மருத்துவம் சம்பந்தமாக உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக நிலவுகின்ற அவசியப்பாடுகளை உயர்தரம் கொண்டதாக ஈடேற்றுவதோடு, சுதேச மருத்துவத்தின் தனித்துவத்தைப் பாதுகாத்து சேவை வழங்குதலை முதன்மையாகக் கொண்ட முன்னோடியாக மாறுதல்."
எமது பணி
"உயர்தரம் கொண்ட ஆயுர்வேத மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், சேவை வழங்குதல் மற்றும் பேணுதல் மூலமாக மக்களின் அவசியப்பாடுகளை ஈடேற்றுவதைப் போன்றே ஊழியர்களினதும் சமூகத்தினதும் நல்வாழ்வுக்காக இயங்கிவருவதோடு, ஆரோக்கியமிகு சமூகமொன்றை உருவாக்கும் பொருட்டு செயலாற்றுதல்."
இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் பற்றி
அரசாங்க வைத்தியசாலைகள், ஆயுர்வேத மருத்துவ தொழில்வாண்மையாளர்கள் மாத்திரமன்றி தனியார் துறைக்கும் அவசியமான ஆயுர்வேத மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான முன்னோடி நிறுவனமென்ற வகையில் இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் 1957 இன் 49 ஆம் இலக்கமுடைய அரச கைத்தொழில்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 1969 மே மாதம் 11 ஆம் திகதிய 14853/1 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் மூலமாக 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு, இது தற்போது 40 வருடங்களுக்கு மேலாக இலங்கைச் சுகாதாரத் துறையில் பிரதானமான கடமைப் பொறுப்பினை ஈடேற்றி வருகின்றது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நுகர்வோர்களும் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆயுர்வேத மருந்துப்பொருள் பற்றி மிகுந்த நம்பிக்கையுடனும் சாதகமான மனோபாவத்துடனும் உள்ளனரென்பது இங்கு குறிப்பிடப்படல் வேண்டும். ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் வியாபார நிறுவனமொன்றாக இயங்கி வருவதைவிட கொள்கை ரீதியாக மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்குதல் ஆகிய துறைகள் மீது அதிக கவனஞ் செலுத்தி உள்ளது. ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் நிறுவப்படுதலுக்கான பிரதான நோக்கங்களாக அமைவன,
- ஆயுர்வேத ஒளடதங்கள், மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருந்து வகைகளை உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்ளல்.
- சித்தாயுர்வேத மற்றும் யுனானி ஆயுர்வேத ஒளடதங்களை (ஒளடத மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த ஒளடதங்கள்) இறக்குமதி செய்தல்.
- உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற பச்சை ஆயுர்வேத ஒளடதங்களை கொள்வனவு செய்தலும் அந்த ஒளடதங்களைத் தயாரித்தலும்.
- ஆயுர்வேத ஒளடத உற்பத்தி தொடர்பான மருந்தாக்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலும் மேற்படி ஒளடதங்களை தரநியமப்படுத்தலும்.
- ஆயுர்வேத மூலிகைச் செடி செய்கைகளைப் பேணிவருதலும் ஒளடத உற்பத்திக்கு அவசியமான உள்ளூர் மூலிகைச் செடியினங்களை உற்பத்தி செய்தலும்.
- சுத்தமான பசும்பால் பெறும் பொருட்டு பாற்பண்ணைகளை ஏற்படுத்துதலும் அவற்றைப் பேணிவருதலும், ஆயுர்வேத மருந்துவகை தயாரிப்புக்கு அவசியமான சுத்தமான நெய் உற்பத்தி செய்தல்.
- தேனீ வளர்ப்பினை பேணிவருதலும் ஆயுர்வேத மருந்துப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான தேன் உற்பத்தி செய்தலும் தேனீ வளர்ப்பினை குடிசைக் கைத்தொழிலாக முன்னேற்றுதல்.