இதன் பொருட்டு மூலப்பொருட்கள் உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படுவதோடு உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாத மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
மருந்துவகை மூலப்பொருட்களை தாவரம், விலங்கு மற்றும் கனிப் பொருட்கள் எனப் பிரித்து வகைப்படுத்தி உள்ளனர்.
தாவர ரீதியான மூலப்பொருட்களாக இலை, பட்டை, வேர், மலர் மற்றும் விதை என்பன கொள்ளப்படுவதுடன் விலங்குப் பிரிவுகளாக பால், இறைச்சி, சிறுநீர், சாணம், ஓடு, முத்து என்பனவும் கனிப் பொருட்களாக நிலத்தில் இருந்து பெறப்படுகின்ற பாறை வகைகள், உலோகங்கள் மற்றும் கனியுப்புக்கள் பாவிக்கப்படுகின்றன.
இவற்றில் ஒருசில தாவரங்களும் பெரும்பாலான கனிப் பொருட்களும் மனித உடலுக்கு ஒவ்வாதனவாகவும் நச்சுத்தன்மை கொண்டதாகவும் அமைவதால் அவை நோய் நுண்மநீக்க வழிமுறைகளினூடாக மனித உடலுக்கு சாதகமானதாக தயாரித்து ஒளடத உற்பத்திக்காக பாவிக்கப்படுகின்றன.