G
சிங்கள பெயர் | கொட்டுகொல | ![]() |
தமிழ் பெயர் | வல்லாரைக் கீரை | |
ஆங்கில பெயர் | - | |
விஞ்ஞானப் பெயர் | Centella asiatica (l.) Urban. |
விளக்கம்
அறிமுகம் | தேரையின் வடிவத்திற்கிணங்க இலைகள் படர்வதால் மஸ்டுகர்பனி என அழைக்கப்படுகின்றது. சிறிய வல்லாரை, பெரிய வல்லாரை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் சிறிய வல்லாரை சத்து மிக்கது. கீரை வகைகள் மத்தியில் பிரபலமான கீரை வகையாகும். அலங்காரத்தின் பொருட்டு வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கலாம். |
இயற்பியல் சிறப்பியல்புகள் | நிலத்தில் படர்ந்து வளரும் தாவரமாக அமைவதோடு கணுக்களிலிருந்து வேர்கள் முளைக்கும். இலைகள் சிறிதாக அமைவதோடு 2 - 4 சென்றி மீற்றர் நீளமுடையது. வட்ட வடிவமானது. நுனி ஓரங்கள் பற்சில்லு வடிவம் கொண்டவை. மலர்கள் சிறியனவாக அமைவதோடு ரோசா நிறம் சார்ந்த சிவப்பு நிறமுடையது. மலர்கள் கொத்தாக குடை வடிவம் பெறும். |
வாழ்விடம் | ஈரலிப்பான நிலம் மற்றும் வயல்கள் போன்ற நீர் சார்ந்த சுற்றாடல்களில் மிக செழிப்பாக வளரும். நடுகை செய்து மூன்று மாதங்களில் அறுவடை பெறலாம். |
மருந்துக்கான பாகங்கள் | முழுச் செடியும், வேர்கள், தண்டுகள், இலைகள். |
மருத்துவக் குணம் | வல்லாரை அறிவினை வளர்க்கும், ஞாபக சக்கியை வளர்க்கும், பசியை ஏற்படுத்தும், குரலை இனிமையாக்கும், குருதியை சுத்தமாக்கும், பீனிசத்தை குணமாக்குவதோடு மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும், கண்ணுக்கும் தலை மயிருக்கும் இதமானது. காம சக்தியை மேம்படுத்தும். |
R
சிங்கள பெயர் | ரத்தம்பலா, தியரத்மல் | ![]() |
தமிழ் பெயர் | அசோகம் | |
ஆங்கில பெயர் | Asoka Tree | |
விஞ்ஞானப் பெயர் | Saraca asoca (Roxb.) De Wilde |
விளக்கம்
அறிமுகம் | மகளிர் நோய்களின் போது பெண்கள் அனுபவிக்கும் சோகத்தை ஒழிப்பதனால் அசோக என அழைக்கப்படுகின்றது. மகளிர் நோய்களுக்கு அசோகம் பரவலாக பயன்படுத்தப்படுவதால் இவ்விதமாக அழைக்கப்படுகின்றதென புலனாகின்றது. |
இயற்பியல் சிறப்பியல்புகள் | 6 - 9 மீற்றர் உயரமுடைய விருட்சமாகும். பெரிய இலைகள் பகுதிகளாகப் பிரிந்துள்ளன. 4 - 6 சோடிப் பகுதிகளாகும். இலைகள் அடியில் இருந்து நுனியை நோக்கிப் செல்லும் போது படிப்படியாக மெல்லிய வடிவம் பெறுகின்றன. இலைக் காம்பு தண்டுடன் பொருந்துகின்ற இடம் காக்கி நிறமுடைய பாரிய உப இலைகள் இரண்டு உள்ளதோடு இவை பின்பு உதிரும். மலர்கள் கொத்துக்களாக மலரும். நறுமணங்கொண்ட மலர்களில் இதழ்கள் கிடையாது. மலர் இதழ்களுக்கு கீழே உள்ள பகுதி. (மகரந்தம்) மஞ்சள், இளமஞ்சள் மற்றும் பின்னர் சிவப்பு நிறமுடையதாக அமையும். கொத்தில் மலர்கள் ஒரே மட்டத்திலேயே அமையும். அதனுள்ளே 4 - 8 விதைகள் காணப்படும். |
கிடைக்கும் இடங்கள் | தாழ்நில ஈரவலயத் தாவர வகையைச் சேர்ந்த இது நக்கிள்ஸ் மலைத்தொடரின் நீர்சார்ந்த பள்ளத்தாக்குகளில் பரவலாகக் காணப்படுகின்றது. |
மருந்துக்கான பாகங்கள் | பட்டை, விதை, மலர்கள் |
மருத்துவக் குணம் | சளி மற்றும் பித்தத்தை தணிக்கும். வேதனையையும் நச்சுத் தன்மையையும் நீக்கும். வீக்கத்தை ஒழிக்கும். கருப்பையில் தளர்வினை ஏற்படுத்தும். சிறுநீர் கோளாறுகளை நீக்குவதோடு சிறுநீரக கற்களை இல்லாதொழிக்கும். |
பயிர் செய்கை | நன்கு முதிர்ச்சியடைந்த உயிருள்ள விதைகளை ஈரலிப்பான மணல் நாற்று மேடையில் இட்டு 14 - 17 நாட்களில் முளைக்கச் செய்து கொள்ளலாம். விதைக் கன்றுகள் 4 - 6 அங்குலம் வரை வளர்ந்ததும் நாற்று மேடையில் இருந்து அகற்றி நேரடியாகவே களத்திலோ வளமாக்கிகள் கலந்த மண்நிரப்பப்பட்ட பொலித்தீன் உறைகளில் இட்டு 3 - 6 மாதங்களுக்குப் பின்னர் களத்தில் நடுக. மரங்களுக்குடையிலான இடைவெளி 1 ½ - 2 மீற்றர் வரை இடுக. ஈர மற்றும் இடைவலயத்திற்கு உகந்தது. |